சேறும், சகதியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

சேறும், சகதியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-10-15 18:45 GMT

கிணத்துக்கடவு

ஆத்து பொள்ளாச்சியில் இருந்து குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கிணத்துக்கடவு, குறிச்சி, குனியமுத்தூர் ஆகிய பகுதிகளுக்கு ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி காலை கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் அந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதை அறிந்து வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்தனர். எனினும் குழாயில் இருந்த வெளியேறிய தண்ணீருடன் மண் கலந்து, போலீஸ் நிலையம் முதல் அரசு மேல்நிலைப்பள்ளி வரை சாலையில் சேறும், சகதியுமாக மாறி கிடக்கிறது. இதனை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அகற்றாமல் சென்றுவிட்டனர். இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் தவறி விழும் அபாயம் உள்ளது. இதனால் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சேறும், சகதியுமாக கிடக்கும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்