நெடுஞ்சாலையோரத்தில் வளர்ந்துள்ள முள்செடிகளால் வாகன ஓட்டிகள் அவதி

பாதரக்குடி முதல் எருக்கூர் வரை நெடுஞ்சாலையோரத்தில் வளர்ந்துள்ள முள்செடிகளால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2023-10-13 18:45 GMT

சீர்காழி:

புதர் மண்டிகிடக்கும் முள்செடிகள்

சீர்காழியில் இருந்து சிதம்பரம் வரை நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாலையில் சீர்காழி அருகே பாதரக்குடி முதல் எருக்கூர் வரை நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் முள்செடிகள் மண்டி புதர் போல் காட்சி அளிக்கிறது.

வாகன ஓட்டிகள் அவதி

இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மாறும் பொழுது சாலை ஓரம் உள்ள முள்செடிகளால் வாகனங்களின் பக்கவாட்டுப்பகுதி பாதிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் சாலை ஓரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களின் முகத்தில் முள்செட்டிகள் குத்தி விடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

அகற்ற வேண்டும்

ஒரு சில இடங்களில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு முள்ெசடிகள் வளர்ந்துள்ளன. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து தடை ஏற்பட்டு வருகிறது.எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் போக்குவரத்திற்கு இடையூறாக மண்டி கிடக்கும் முள்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்