தர்மபுரியில் கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை-வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
தர்மபுரி:
தமிழ்நாட்டில் தமிழைக் காக்க வேண்டும் என்பதற்காக தமிழைத்தேடி என்ற தலைப்பில் டாக்டர் ராமதாஸ் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிலுள்ள நிறுவனங்களின் பெயர் பலகையை தமிழை முதன்மைப்படுத்தி அமைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையின்படி, தமிழை முதன்மைப்படுத்தி பெயர் பலகைகளை அமைக்க வேண்டும் என்று தர்மபுரி வணிக நிறுவனங்களிடம் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
இந்த நிலையில் தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் உள்ள மலர் அங்காடிகளின் தமிழ் பெயர் பலகைகளை அவர் திறந்து வைத்து பொதுமக்கள் மற்றும் வனிகர்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் முன்னாள் எம்.பி பாரிமோகன், பா.ம.க. மாநில துணைத்தலைவர் சாந்தமூர்த்தி, மாநில இளைஞர் சங்க செயலாளர் முருகசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் வணங்காமுடி, மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் பாலாஜி, பசுமைத் தாயக மாநில துணை செயலாளர் மாது உள்பட பலர் கலந்து கொண்டனர்.