ஜப்பான் முன்னாள் பிரதமர் மறைவுக்கு இரங்கல்: விழுப்புரம் அரசு அலுவலகங்களில் அரைக்கம்பத்தில் பறந்த தேசிய கொடி

ஜப்பான் முன்னாள் பிரதமர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் விழுப்புரம் அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்தது.;

Update:2022-07-09 21:47 IST

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே, தேர்தல் பிரசாரம் செய்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மத்திய அரசின் அறிவுரைப்படி ஒரு நாள் மட்டும் தேசிய துக்க நாளாக கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அரசு அலுவலகங்களில் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்தன.

இந்நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தேசிய கொடி, அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்தன.

........................

Tags:    

மேலும் செய்திகள்