தேசிய அளவிலான கருத்தரங்கம்

கலவை ஆதிபராசக்தி கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.;

Update:2023-02-16 23:15 IST

கலவை ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சார்பில், தடுப்பூசி தயாரிப்பில் நுண்ணுயிர்களின் பயன்பாடு என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அ.முகமது சாதிக் தலைமை தாங்கினார். நுண்ணுயிரியல் துறைத் தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் டி.பிரபு கலந்து கொண்டு, தடுப்பூசிகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன, என்னென்ன படிநிலைகள் உள்ளன, எவ்வாறு தரக்கட்டுப்பாடு செய்யப்படுகின்றன மற்றும் தடுப்பூசிகளின் வகைகள் பற்றி கூறினார்.

சவீதா பொறியியல் கல்லூரி ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புத் துறை பேராசிரியர் டாக்டர் எஸ்.கார்த்திக் ராஜா நமசிவாயம் பேசுகையில், தடுப்பூசி தயாரிப்பில் நானோ தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் தடுப்பூசியினால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகள், எவ்வாறு நானோ தடுப்பூசிகள் தரக் கட்டுப்பாடு செய்யப்படுகின்றன என்பது பற்றி கூறினார். கருத்தரங்கில் மாணவ- மாணவிகள் தங்கள் ஆய்வு கட்டுரைகள் மற்றும் சுவரொட்டிகளை சமர்ப்பித்தனர். அதில் சிறந்த கட்டுரைகள் மற்றும் சுவரொட்டிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. கருத்தரங்கில் பல்வேறு கல்லூரி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், ஆராய்ச்சியாளர்கள் என 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியை மா.செல்லக்கண்ணு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்