ராசிபுரம்:
ராசிபுரம் டவுன் பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது. அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் துரைசாமி, ராசிபுரம் வட்டார கல்வி அலுவலர் அருள்மணி, அறிவியல் இயக்கத்தின் ஒன்றிய கிளை தலைவர் ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். பள்ளி மாணவிகள் சர் சி.வி.ராமன் குறித்த நாடகத்தை அரங்கேற்றினர். மாவட்ட அறிவியல் இயக்க தலைவர் சர் சி.வி. ராமனின் ஒளி சிதறல் மற்றும் ராமன் விளைவு குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் பாரதி நன்றி கூறினார்.