கூடலூர் அருகேதாமரை போல் காணப்படும் வாழைப்பூ பொதுமக்கள் ஆச்சரியம்
கூடலூர் அருகேதாமரை போல் காணப்படும் வாழைப்பூ;
கூடலூர்
கூடலூரில் இருந்து கேரள மாநிலம் சுல்தான்பத்தேரிக்கு செல்லும் சாலையில் எருமாடு பகுதி உள்ளது. இங்கு ஒரு தோட்டத்தில் பயிரிட்டுள்ள வாழை மரத்தில் குலையுடன் கூடிய வாழை பூ காணப்படுகிறது.
இதை பார்க்கும் போது தாமரைப் பூ போல் வடிவத்துடன் காணப்பட்டது.
வழக்கமாக வாழைப்பூ அவ்வாறு காணப்படுவதில்லை. இதை அப்பகுதி மக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.