ஈரோடு அருகேஉலக தண்ணீர் தின கிராமசபை கூட்டம்;கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பங்கேற்பு

ஈரோடு அருகே நடந்த உலக தண்ணீர் தின கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பங்கேற்றாா்.

Update: 2023-03-22 21:19 GMT

உலக தண்ணீர் தினத்தையொட்டி சிறப்பு கிராமசபை கூட்டம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 ஊராட்சிகளிலும் நடைபெற்றது. ஈரோடு அருகே எலவமலை ஊராட்சிக்கு உள்பட்ட மூலப்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கூடத்தில் நடந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து குறைகளை கேட்டறிந்தார். அதன்பிறகு அவர் பேசும்போது கூறியதாவது:-

ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம், மே தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களிலும், சில முக்கியமான தினங்களிலும் கிராம சபை கூட்டம் நடந்து வருகிறது. இந்தநிலையில் உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. கிராமங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அதிகரிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு மரக்கன்றுகளை நட வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் கொசு மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது. சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்