என்.ஜி.பி. கல்லூரி அணி வெற்றி

மாவட்ட கைப்பந்து போட்டியில் என்.ஜி.பி. கல்லூரி அணி வெற்றி பெற்றது.;

Update:2022-10-16 00:15 IST

கோவை நேரு விளையாட்டு மைதானம் அருகே உள்ள மாநகராட்சி மைதானத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 36 அணிகள் கலந்து கொண்டன.

போட்டிகள் அனைத்தும் நாக்அவுட் முறையில் நடக்கிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் கோவை ஏ.ஆர்.வி.பி.சி. அணியும், கதிர் என்ஜினீயரிங் கல்லூரி அணியும் மோதின.

இதில் ஏ.ஆர்.வி.பி.சி. அணி 2-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

2-வது போட்டியில் என்.ஜி.பி. கல்லூரி அணி, கே.சி.கே. கணுவாய் அணியை எதிர்கொண்டது. இதில் என்.ஜி.பி. கல்லூரி அணி வீரர்கள் சிறப்பாக ஆடி 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றனர்.

கோவை மேற்கு மண்டல போலீஸ் அணியை எதிர்த்து ரைசிங் ஸ்டார் அணியினர் களம் இறங்கினர். இதில் கோவை மேற்கு மண்டல போலீஸ் அணி 2-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றனர். இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) போட்டிகள் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணிக்கு மாலையில் நடைபெறும் விழாவில் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகின்றன

மேலும் செய்திகள்