பொழுது போக்கு மையத்தை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்

வெம்பக்கோட்டை பகுதிகளில் பொழுது போக்கு மையத்தை ஆக்கிரமித்து கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.

Update: 2023-06-12 20:15 GMT

தாயில்பட்டி, 

வெம்பக்கோட்டை பகுதிகளில் பொழுது போக்கு மையத்தை ஆக்கிரமித்து கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.

பொழுது போக்கு மையம்

வெம்பக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த அனைத்து கிராமங்களிலும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிறுவர்கள், சிறுமிகள், மகிழ்ந்து விளையாட ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு, பளுதுக்கும் கருவிகள், பெண்கள் விளையாடுவதற்கான உபகரணங்கள், நடைபயிற்சி செய்வதற்கு ஏதுவாக நடைபாதை மற்றும் ஓய்வெடுப்பதற்காக பெஞ்ச் வசதி அமைக்கப்பட்டது.

நாளடைவில் விளையாட்டு பொழுது போக்கு மையத்தை பராமரிக்க ஊராட்சியில் நிதி ஒதுக்கப்படாததால் விளையாட்டு உபகரணங்கள் காணாமலும், சேதமடைந்தும் போய் விட்டன.

பயன்பாட்டிற்கு வருமா?

அதிலும் குறிப்பாக துலுக்கன்குறிச்சி காலனியில் பயன்படுத்தாமல் விளையாட்டு பொருட்கள் வீணாகிக் கொண்டிருக்கின்றன. பல ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட விளையாட்டு பொழுதுபோக்கு மையம் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது.

மீதி இடங்களில் விளையாட்டு மையங்களில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதனால் பொதுபோக்கு மையம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இதனால் சிறுவர், சிறுமிகள், பெண்கள், பொழுது போக்குவதற்கு இடமில்லாமல் சிரமப்படுகின்றனர்.

ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளையாட்டு பொழுதுபோக்கு மையத்திற்கு தேவையான உபகரணங்களை வழங்கி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்