கலைஞரின் தரிசுநில மேம்பாட்டு பணிகளை அதிகாரி ஆய்வு

கலைஞரின் தரிசுநில மேம்பாட்டு பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.

Update: 2023-07-14 19:44 GMT

மேல்பாடி

கலைஞரின் தரிசுநில மேம்பாட்டு பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.

கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பசுமை போர்வைக்கான இயக்கம் எனும் பெயரில் தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டம் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் காட்பாடி தாலுகாவில் விண்ணப்பள்ளி, இளையநல்லூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட்டு சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் தரிசு நிலம் தேர்ந்தெடுத்து அதில் தொகுப்பு குழு அமைத்து அந்த குழுவிற்கு இலவச சோலார் மின் இணைப்பு வழங்கி மா, சப்போட்டா உள்ளிட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

இதனை மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் மணிகண்டன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மா, சப்போட்டா உள்ளிட்ட செடிகளின் வளர்ச்சி குறித்தும், ஊடுபயிர்களாக பயிரிடப்படும் வேர்க்கடலை, உளுந்து, காராமணி உள்ளிட்ட பயிர்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட நடவுப் பொருள் உதவி இயக்குனர் சிவகுமாரன், காட்பாடி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் ஜெகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்