முதியவர் விஷம் குடித்து தற்கொலை
நெல்லை அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சேதுராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் ஜோசப் (வயது 59). இவர் தனது மனைவியுடன் நெல்லை பெருமாள்புரம் அருகே ரெட்டியார்பட்டி கார்த்திகேயன் நகரில் ஒரு தோட்டத்தில் குடியிருந்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சம்பவத்தன்று கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ஜோசப் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.