விஷம் குடித்து முதியவர் தற்கொலை

மயிலாடுதுறையில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்;

Update:2023-04-22 00:45 IST

மயிலாடுதுறை;

மயிலாடுதுறை சேந்தங்குடி தென்பாதி தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது70). இவர் கடந்த 3 மாதமாக சிறுநீரக பிரச்சினை தொடர்பாக சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஜெயராஜ் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்துமயங்கி விழுந்தார். இதைக்கண்ட அவரது குடும்பத்தினர் ஜெயராஜை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்குகொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயராஜ் இறந்தார்.இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்