திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மாமந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி யசோதை(வயது 80). இவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார், அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே யசோதை உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.