நீர்மோர் பந்தல் திறப்பு

எட்டயபுரத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.;

Update:2023-05-22 00:30 IST

எட்டயபுரம்:

எட்டயபுரம் அரசு மருத்துவமனை அருகே இந்து முன்னணி ஆட்டோ தொழிலாளர் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. இந்து முன்னணி மாநில தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாநில ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் சக்திவேல், வழக்கறிஞர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீர்மோர் பந்தலை எட்டயபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர் நாராயண மூர்த்தி திறந்து வைத்தார். இதில் எட்டயபுரம் இந்து முன்னணி தலைவர் ஜெயச்சந்திரன், பொறுப்பாளர்கள் பாலாஜி, பட்டு ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்