தங்கம் விலை உயர்வு... ஒரு சவரன் மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டியது - நிலவரம் என்ன..?
தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் மீண்டும் ஒரு லட்ச ரூபாயை தாண்டியுள்ளது.;
கோப்புப்படம்
தங்கம், வெள்ளி விலை போட்டிப்போட்டு தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக விலை குறைந்து வந்தது. ஆங்கில புத்தாண்டு பிறப்பான நேற்று சென்னையில் தங்கத்தின் விலை சற்று குறைந்திருந்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.12,440-க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.99,520-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் மீண்டும் ஒரு லட்ச ரூபாயை தாண்டியுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,00,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.140 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,580-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தைப் போன்றே வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4-ம், கிலோவுக்கு ரூ.4 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.