நமது நகரம் நமது பொறுப்பு திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

நமது நகரம் நமது பொறுப்பு திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

Update: 2022-09-11 12:49 GMT

தமிழகம் முழுவதும் நகர்ப்புறங்களில் நமது நகரம் நமது பொறுப்பு எனும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் தூய்மை பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி காஞ்சீபுரம் மாநகராட்சி பகுதிகளில் நமது நகரம் நமது பொறுப்பு எனும் திட்டத்தின் கீழ் சனிக்கிழமையான நேற்று தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் மாநகராட்சி கவுன்சிலர்கள், தன்னார்வலர்கள் திடக்கழிவு மேலாண்மை குறித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர். பின்னர் வீதி வீதியாக சென்று பிளாஸ்டிக் கழிவு பொருட்களை மூட்டைகளில் சேகரித்து துப்புரவு பணியாளர்களிடம் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் கண்ணன், 4-வது மண்டல குழு தலைவர் மோகன், மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்டிட என்ஜினீயர்கள் சங்க நிர்வாகிகள், தன்னார்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்