மோட்டார் சைக்கிள் மோதி பெயிண்டர் பலி
இலுப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெயிண்டர் பலியானார்.;
இலுப்பூர் புதுதெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 44). பெயிண்டரான இவர், நவம்பட்டி அருகே உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக புங்கினிப்பட்டியை சேர்ந்த சண்முகம் (63) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக ஜெயபிரகாஷ் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ஜெயபிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சண்முகம் காயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சண்முகத்தை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடைேய போலீசார் ஜெயபிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.