பரோட்டா மாஸ்டர் தற்கொலை
சேலம் இரும்பாலை அருகே பரோட்டா மாஸ்டர் தற்கொலை செய்து கொண்டார்.;
இரும்பாலை:-
சேலம் இரும்பாலை அருகே மாரமங்கலத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மாரப்பன் (வயது 45), இவர் அதே பகுதியில் ஒரு ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக இருந்தார். மனைவி, குழந்தைகளை பிரிந்து மாரப்பன் வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் மாரப்பன், காந்தமலை மலையில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த இரும்பாலை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இறந்தவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.