நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி

நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.;

Update:2023-05-05 00:37 IST

ஆலங்குளம்,

ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் இங்கு அடிக்கடி சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இரவு நேரங்களில் சாலைகளில் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்