தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி
வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி நடந்தது.;
ஆனைமலை,
ஆனைமலை அடுத்த வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில், விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காளியாபுரம் பிரிவு பஸ் நிறுத்தத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக சிறுவர் பூங்கா வரை பேரணி நடந்தது. அப்போது என் குப்பை, என் பொறுப்பு, மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்தல் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக உறுதிெமாழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. சிறுவர் பூங்கா பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து கலந்துகொண்டவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோவை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவாரக நாத் சிங், பேரூராட்சி செயல் அலுவலர் சசிகலா, துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது.