குகை திருப்பாவை குழு சார்பில்வெள்ளி கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா

குகை திருப்பாவை குழு சார்பில் வெள்ளி கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா நடந்தது.;

Update:2023-10-08 02:17 IST

சேலம்

சேலம் குகை திருப்பாவை குழு சார்பில் 59-வது ஆண்டாக வெள்ளி கருட வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கோட்டை பெருமாள் வீதி உலா நிகழ்ச்சி நேற்று இரவு குகை பகுதியில் உள்ள சிவபாண்டு ரங்க பஜனை கோவில் மடாலயத்தில் நடைபெற்றது. முன்னதாக உற்சவருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு திருவாராதனம் கண்டருளி பிரசாதம் வழங்கப்பட்டது.

இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதி உலா குகையில் முக்கிய தெருக்கள் வழியாக சென்று மீண்டும் சிவபாண்டு ரங்க பஜனை கோவில் மடாலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை குகை திருப்பாவை குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்