மின்னல் தாக்கி பெருமாள் கோவில் கோபுரம் சேதம்
திருவெண்ணெய்நல்லூரில் மின்னல் தாக்கி பெருமாள் கோவில் கோபுரம் சேதமடைந்தது.;
திருவெண்ணெய்நல்லூர், ஆக.2-
திருவெண்ணெய்நல்லூரில் நேற்று இரவு இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் வைகுண்டவாச பெருமாள் கோவிலின் ராஜகோபுரம் சேதமடைந்தது. அதில் இருந்த பொம்மைகள் சேதமடைந்ததோடு, கோபுரத்திலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம்தான் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.