வணிகர் சங்க நிர்வாகிகள் மனு

பழனி நகராட்சியில் சொத்து வரியை குறைக்க கோரி வணிகர் சங்க நிர்வாகிகள் நகராட்சி தலைவரிடம் மனு கொடுத்தனர்.;

Update:2022-05-22 20:10 IST

பழனி நகர வணிகர் சங்க பேரமைப்பின் கவுரவ தலைவர் ஹரிகரமுத்து, தலைவர் ஜே.பி.சரவணன் தலைமையிலான வணிகர்கள் பழனி நகராட்சி அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர் அங்கு நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அதில் நகர் பகுதியில் உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரி, குப்பை வரி, குடிநீர் வரி ஆகியவற்றால் பொதுமக்கள், வணிகர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டு சொத்து வரியை குறைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் வணிகர் சங்க நிர்வாகிகள் ஜெகதீஷ், மனோஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்