நெல்லையில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி
நெல்லையில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.;
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில், மாநில நெடுஞ்சாலையோரம் 5 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்தில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகிறது. இதன் தொடக்க விழா நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி எதிரே சாலையோரத்தில் நேற்று நடைபெற்றது.
அப்துல் வகாப் எம்.எல்.ஏ. மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். நெல்லை மாவட்டத்தில் புங்கை, வேம்பு, மா, நாவல் போன்ற மரக்கன்றுகள் சாலையோரம் நடவு செய்து பராமரிக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் கண்காணிப்பு பொறியாளர் ஜெயராணி, கோட்ட பொறியாளர் சேதுராஜன், உதவி கோட்ட பொறியாளர் சேகர், முதுநிலை வரைதொழில் அலுவலர் சரவணமுத்து, உதவி பொறியாளர் சண்முகநாதன் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் கலந்து கொண்டனர்.