கவர்னருக்கு எதிரான போராட்டம்: ஈரோட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

கவர்னருக்கு எதிரான போராட்டம்: ஈரோட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு;

Update:2023-01-11 02:45 IST

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் கவர்னர் ரவி பேசினார். அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். இதைத்தொடர்ந்து சட்டசபையில் இருந்து கவர்னர் ரவி வெளியேறினார். கவர்னருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உருவ பொம்பை எரிப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. எனவே ஈரோட்டில் போராட்டம் நடத்தப்படுவதை தடுக்கும் வகையில் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, ரெயில் நிலையம், அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, பஸ் நிலையம், சூரம்பட்டி நால்ரோடு, காளைமாட்டு சிலை, கருங்கல்பாளையம் காந்தி சிலை, வீரப்பன்சத்திரம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்