சத்தியமங்கலத்தில் போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி

சத்தியமங்கலத்தில் போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி;

Update:2023-01-13 03:08 IST

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் போலீஸ் துறை சார்பில் போலீஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி நடுநிலை பள்ளிக்கூடத்தில் பொதுமக்கள் மற்றும் போலீஸ் துறை நல்லுறவு விளையாட்டு போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் கயிறு இழுக்கும் போட்டி, அதிர்ஷ்ட நாற்காலி, ஓட்டப்பந்தயம் உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களையும், பரிசுகளையும் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்