கஞ்சா வழக்கு போடுவதாக போலீசார் மிரட்டல்

கஞ்சா வழக்கு போடுவதாக போலீசார் மிரட்டல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விவசாயி குடும்பத்தினர் புகார்;

Update:2022-07-31 22:24 IST

விழுப்புரம்

விழுப்புரம் அருகே செல்லங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 56). விவசாயியான இவர் தனது குடும்பத்தினருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் அருகே டி.கொசப்பாளையம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் மனைவி கமலாட்சிக்கும் எங்களுக்கும் நிலப்பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. ஆனால் கமலாட்சி, நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் நிலத்தை விற்க முயற்சித்தார். இதுதொடர்பாக கெடார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நிலத்திற்கு தொடர்பு இல்லாத 2 பேர், அந்த நிலத்தை உழுதபோது என் சகோதரர் யுவராஜ் மனைவி விருத்தாம்பாள் தடுக்க முயற்சித்தார். அப்போது அவரை அவர்கள் இருவரும் சேர்ந்து தாக்கியதில் காயமடைந்த விருத்தாம்பாள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கெடார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தபோது புகாரை ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் எங்கள் மீது பொய் வழக்கு போடுவதாகவும், கஞ்சா வழக்கு போடுவதாகவும் கெடார் போலீசார் மிரட்டி வருகின்றனர். எனவே தக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்