போலீசார் வாகன சோதனை

சின்னசேலத்தில் போலீசார் வாகன சோதனை;

Update:2023-02-27 00:15 IST

சின்னசேலம்

சின்னசேலம் பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பதிவெண் இல்லாத வாகனங்கள், உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள், குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்தவர்களை பிடித்து மோட்டார் வாகன விதிகளை பின்பற்றி நடக்க அறிவுரை கூறிய போலீசார் அடுத்த முறை வாகன சோதனையில் இதுபோன்று சாலை விதிகளை மீறி வந்து பிடிபட்டால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்