அரியமங்கலம், பொன்மலை பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்

அரியமங்கலம், பொன்மலை பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update:2023-08-03 00:19 IST

அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரெயில்நகர், நேருஜி நகர், காமராஜ் நகர், மலையப்ப நகர், ராணுவ காலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகர், சக்தி நகர், ராஜப்பா நகர், எம்.ஜி.ஆர். நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜிநகர், மேல கல்கண்டார்கோட்டை, கீழ கல்கண்டார்கோட்டை, வெங்கடேஸ்வரா நகர், கொட்டப்பட்டு (ஒரு பகுதி), அடைக்கல அன்னைநகர், அரியமங்கலம் (சிட்கோ காலனி), காட்டூர், திருநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை, செந்தண்ணீர்புரம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மன்னார்புரம் மின்வாரிய இயக்குதலும், காத்தலும் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்