நாமக்கல்:
திருச்செங்கோடு, ராசிபுரத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடனர்.
ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்ட பொருளாளர் மனோஜ்குமார் வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வன் தலைமை தாங்கினார்.
ஆசிரியர் மன்ற நிர்வாகி பிரபு, அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ராசிபுரம்
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.
இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.