தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம்

காளப்பநாயக்கன்பட்டியில் தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.;

Update:2022-05-24 19:55 IST

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டி வ.உ.சி திடலில் ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், பொன்னுசாமி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, சேந்தமங்கலம் பேரூர் செயலாளர் தனபாலன், முன்னாள் எம்.பி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக திருச்சி சிவா எம்.பி. கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் அறிவழகன், துணை அமைப்பாளர் இளவரசு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கதிர்வேல், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், சேர்ந்தமங்கலம் பேரூராட்சி தலைவர் சித்ரா தனபாலன், துணைத்தலைவர் ரகு, காளப்பநாயக்கன்பட்டி சோழா ஜெகதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்