தேசிய அளவிலான பளுதூக்கும் அணிக்கான தேர்வு போட்டிகள் வேலூர் பளுதூக்கும் பயிற்சி மையத்தில் நடந்தது. 19 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்களுக்கு பல்வேறு எடைப்பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் தென்காசி, மதுரை, கோவை, தஞ்சாவூர், வேலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 80 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். ஆண்கள் அணிக்கு 10 பேரும், பெண்கள் அணிக்கு 10 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டதில் ஆண்கள் அணியில் 4 பேர், பெண்கள் அணியில் 8 பேர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.