வெண்ணந்தூர்:
வெண்னந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான அளவாய்ப்பட்டி, நடுப்பட்டி, அத்தனூர், பழந்தின்னி பட்டி, நடுப்பட்டி, செம்மாண்டப்பட்டி, நாச்சிபட்டி, மின்னக்கல் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் வெண்ணந்தூரில் நேற்று இரவு திடீரென கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடி, தாழ்வான பகுதிகளில் தஞ்சம் அடைந்தது. திடீரென பெய்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.