அந்தியூரில் மழை; வேருடன் சாய்ந்த வேப்ப மரம்

அந்தியூரில் மழை பெய்ததில் வேருடன் வேப்ப மரம் சாய்ந்தது.;

Update:2023-09-19 03:19 IST

அந்தியூர்

அந்தியூர் தவுட்டுப்பாளையம் பகுதியில் நேற்று மதியம் 2 மணி அளவில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 1 மணி நேரம் நீடித்தது. இதன் காரணமாக அந்தியூர் சத்தியமங்கலம் ரோட்டில் கெட்டிவிநாயகர் கோவில் அருகே உள்ள வேப்ப மரம் ஒன்று வேருடன் சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்