மாவட்ட வருவாய் அலுவலராக ராஜசேகரன் பொறுப்பேற்பு

கடலூர் மாவட்ட வருவாய் அலுவலராக ராஜசேகரன் பொறுப்பேற்பு;

Update:2023-05-10 00:15 IST

கடலூர்

கடலூர் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த பூவராகன் திடீரென ராமநாதபுரம் நகாய் (நில எடுப்பு) மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ராமநாதபுரம் நகாய் (நில எடுப்பு) மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் கடலூர் மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் புதிய கடலூர் மாவட்ட வருவாய் அலுவலராக ராஜசேகரன் பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம், நாமக்கல் மாவட்டத்தில் கோட்டாட்சியராக பணியாற்றினார். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலராக பதவி உயர்வு பெற்று ராமநாதபுரத்தில் பணியாற்றினார். புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட வருவாய் அலுவலருக்கு வருவாய் துறை அலுவலர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்