மத்திய சிறைக்கு புத்தகங்கள் வழங்கிய ரஜினி ரசிகர்கள்

மத்திய சிறைக்கு ரஜினி ரசிகர்கள் புத்தகங்கள் வழங்கினர்.;

Update:2023-08-01 02:42 IST


நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளிவர உள்ள ஜெயிலர் படத்தை வரவேற்கும் விதமாக மதுரை மத்திய சிறைச்சாலையில் உள்ள நூலகத்தில் சிறை கைதிகள் படிப்பதற்காக ரூ.1 லட்சம் மதிப்பிலான இலவச புத்தகங்கள் மற்றும் மியூசிக்கல் கீ போர்டு உள்ளிட்ட பொழுதுபோக்கு விளையாட்டு உபகரணங்களை ரஜினி ரசிகர்கள் பால நமச்சிவாயம், கோல்டன் சரவணன், அழகர்சாமி, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி குமாரவேல் உள்ளிட்டோர் சிறைத்துறை டி.ஐ.ஜி.பழனியிடம் வழங்கினார்கள்.

மதுரை மாநகர் மாவட்ட ரஜினி மன்றத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் புத்தகங்கள் வழங்கிய பால நமச்சிவாயம், கோல்டன் சரவணன் ஆகியோருக்கு சிறைத்துறை டி.ஐ.ஜி.பழனி பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்