ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம்

குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க கோரி ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் கையில் காலித்தட்டு ஏந்திஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2022-10-15 00:15 IST

கோவை

குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க கோரி ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் கையில் காலித்தட்டு ஏந்திஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.7,850-ஐ அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் நேற்று கோவையில் தெற்கு தாசில்தார் அலுவல கம் முன்பு கையில் காலித்தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.

இதற்கு முன்னாள் மாநில துணை தலைவர் ராஜேஸ்வரி முருகேசன் தலைமை தாங்கினார்.

.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையில் காலித்தட்டு ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

இலவச காப்பீட்டு திட்டம்

அரசின் சத்துணவு திட்டத்தில் 40 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது ரூ.2 ஆயிரம் மட்டுமே ஓய்வூதியமாக பெற்று வருகிறோம். இதனால் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் களின் வாழ்க்கை அவலநிலையில் உள்ளது.

எனவே குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.7,850-ஐ அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். பணியின்போது பிடித்தம் செய்யப்பட்ட தொகை ஓய்வு பெற்ற பிறகும் கிடைக்கவில்லை. அதை உடனே வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தை வழங்க வேண்டும்.

பொங்கல் போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


மேலும் செய்திகள்