தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.

Update: 2022-10-26 18:45 GMT

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஐடக் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஆகாஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன், திட்ட இயக்குனர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் அரசின் திட்டங்களான கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சமத்துவபுரம், நமக்கு நாமே திட்டம், ஜல் ஜீவன் மிஷன், அம்ருத் 2.0, மற்றும் நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கான நில எடுப்புகள், பட்டா மாறுதல் தொடர்பான ஆய்வுகள், எண்ணும் எழுத்தும் இயக்கம், பள்ளி கட்டிடங்களின் உட்கட்டமைப்பு, மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், முதலமைச்சரின் சிறப்பு திட்டமான பள்ளிகளில் காலை உணவு திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் பணி முன்னேற்றம் குறித்து அனைத்து அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டு அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்