தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு பேரணி

தென்காசியில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2023-10-08 19:00 GMT

தென்காசி மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இருந்து இந்த பேரணி தொடங்கியது. இதனை தென்காசி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பொன் பாண்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், அரசு தொழிற்பயிற்சி பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், தன்னார்வ தொண்டர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை வைத்திருந்தனர். பொதுமக்களுக்கு இதுகுறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பேரணி நெல்லை - தென்காசி சாலை, சம்பா தெரு, சுவாமி பஜார் வழியாக காசி விசுவநாத சுவாமி கோவில் முன்பு முடிவடைந்தது.

நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர்கள் சுரேஷ் ஆனந்த், பிரதீப் குமார், அரசு வக்கீல் முருகன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மாவட்ட கல்வி அலுவலர் சுப்புலட்சுமி, தொழிற்பயிற்சி கல்லூரி முதல்வர் கோமதி சங்கர், இந்து பள்ளி தலைமை ஆசிரியர் பரமேஸ்வரன், 108 ஆம்புலன்ஸ் நிலைய அலுவலர்கள் ரமேஷ், கருப்பையா, ஷேக் அப்துல்லா மற்றும் வக்கீல்கள், தீயணைப்பு துறை கமாண்டோ வீரர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்