ஆலங்குப்பம்-கோனேரிக்குப்பம் இடையேரூ.7 கோடியில் சாலை அமைக்கும் பணிஅமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்

ஆலங்குப்பம்-கோனேரிக்குப்பம் இடையே ரூ.7 கோடியில் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.

Update: 2023-01-25 18:45 GMT


பிரமம்தேசம்,

பிரம்மதேசம் அருகே ஆலங்குப்பம் கிராமத்தில் இருந்து கோனேரிக்குப்பம் வரை 4 கி.மீ. தூரம் உள்ள இருவழிச்சாலையை அகலப்படுத்துதல், பழைய பாலங்களை அகற்றிவிட்டு, புதிதாக பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் ரூ. 7 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கும் வகையில், அடிக்கல் நாட்டு விழா ஆலங்குப்பம் கிராமத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

இதில் ஒன்றியக்குழு் தலைவர் தயாளன், துணை தலைவர் பழனி, மாவட்ட துணைசெயலாளர் ரவிக்குமார் மற்றும் மத்திய ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், கோட்ட பொறியாளர் சிவசேனா , உதவி கோட்ட பொறியாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்