சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
அரியலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.;
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவுபடி அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. அப்போது அரசு பஸ்களில் படிக்கட்டில் மாணவர்கள் பயணம் செய்யக்கூடாது, 18 வயது குறைவான மாணவர்கள் மோட்டர் சைக்கிளை ஓட்டக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், அரியலூர் நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.