சேவல் சூதாட்டம்

சேவல் சூதாட்டம்;

Update:2023-01-20 00:15 IST

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியில் சேவல் சூதாட்டம் நடைபெறுவதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் சேவல் சூதாட்டம் நடத்தியதாக தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த சிவக்குமார், காணியாலாம்பாளையம் பகுதியை சேர்ந்த லோகநாதன், முள்ளுப்பாடி பகுதியை சேர்ந்த பஞ்சலிங்கம் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.300 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்