சாத்தூர் வெங்கடாசலபதி கோவிலில் சமபந்தி விருந்து

சாத்தூர் வெங்கடாசலபதி கோவிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது.

Update: 2023-08-16 20:48 GMT

சிவகாசி, 

சாத்தூர் வெங்கடாசலபதி கோவிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது.

காளீஸ்வரி கல்லூரி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் நடைபெற்ற சுதந்திரதினவிழாவிற்கு கல்லூரியின் செயலர் ஏ.பி.செல்வராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனத்தின் செவித்திறன் குறைபாடு உடையோருக்கான சிறப்பு கல்வித்துறை தலைவரும், கல்லூரியின் முன்னாள் மாணவியுமான கார்த்திகாதேவி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். கல்லூரியின் முதல்வர் பாலமுருகன் உறுதி மொழி வாசித்தார்.

முன்னதாக மாணவி சோனியா வரவேற்று பேசினார். முடிவில் மருது நன்றி கூறினார். சிவகாசி எஸ்.ஆர். வி. கல்விக்குழுமத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு செல்வரதி கல்வி அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் நல்லாசிரியர் வீரணன் தலைமை தாங்கினார். முதல்வர் வெங்கடலட்சுமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் டாக்டர் செல்வரதி வீரணன், எஸ்.ஆர்.வி. கலை மற்றும் அறி வியல் கல்லூரியின் முதல்வர் மாரிச்சாமி, உதவி பேராசிரியர் விஜயகுமார், உடற்கல்வி இயக்குனர் முருகன், ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் வெயில்முத்து பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கு பரிசு

சிவகாசி ஷாபி மதஹப் பெரிய பள்ளி வாசல் நிர்வாகத்திற்கு பாத்தியப்பட்ட முஸ்லிம் ஆரம்ப பள்ளி, முஸ்லிம் மேல்நிலைப்பள்ளிகளில் சுதந்திரதினவிழா கொண்டாடப்பட்டது. இதில் சிவகாசி தலைமை தபால் நிலைய அதிகாரி சுரேஷ்சித்தன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

முஸ்லிம் ஆங்கில மீடியம் பள்ளியில் முஸ்லிம் பள்ளிகளின் தாளாளர் முகைதீன் அப்துல்காதர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் பெரிய பள்ளி வாசல் ஜமாத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சேக்முகம்மது மீரான் வரவேற்றார். அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. ஆரம்ப பள்ளி தலைமையாசிரியர் திருப்பதி நன்றி கூறினார்.

சமபந்தி விருந்து

சுதந்திரதினத்தையொட்டி சாத்தூர் வெங்கடாசலபதி கோவிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதனை நகர்மன்ற தலைவர் குருசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சாத்தூர் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திரதினவிழாவில் யூனியன் தலைவர் நிர்மலா கடற்கரைராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஸ்வரன், காமேஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்