வடுவூர் கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெற்று முடிவடைந்தது. தொடர்ந்து விடையாற்றி திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புஷ்ப பல்லக்கில் சாமி வீதி உலா நடத்தப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கோதண்டராமர், சீதாதேவி தாயாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சாமி வீதிஉலா முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.