என்னை வளர்த்தெடுத்த கொள்கை ஆசான்களில் ஒருவர்: பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் பதிவு

கழகத்தின் தொடர் வெற்றிகளை பேராசிரியர் க.அன்பழகனுக்கு அஞ்சலியாக உரித்தாக்குகிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;

Update:2025-12-19 12:07 IST

மறைந்த திமுக முன்னாள் பொதுச்செயலாளரும், பேராசிரியருமான க.அன்பழகனின் 103-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பேராசிரியர் க.அன்பழகனின் பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

கழகம் எனும் கலத்தைப் புயல்கள் தாக்கியபோதெல்லாம் தலைவர் கலைஞரின் பக்கத் துணையாய் நின்று கரைநோக்கிச் செலுத்திய பேராசிரியர் பெருந்தகையின் பிறந்தநாள்!

என்னை வளர்த்தெடுத்த கொள்கை ஆசான்களில் ஒருவர். நமது திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு புதிய உயரங்களை அடையும் ஒவ்வொரு தருணத்திலும் அவரது நினைவு என்னை ஆட்கொள்ளத் தவறியதில்லை.

கொள்கை உறுதியும் கனிவும் நிறைந்த பேராசிரியர் பெருந்தகை ஊட்டிய திராவிட இனமான உணர்வோடு முன்செல்கிறேன், கழகத்தின் தொடர் வெற்றிகளையே அவருக்கு என் அஞ்சலியாக உரித்தாக்குகிறேன்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்