திருமுல்லைவாசல் முகத்துவாரத்தில் மணல் திட்டுகள்

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் முகத்துவாரத்தில் உள்ள மணல் திட்டுகளை படகில் சென்று அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்.;

Update:2023-09-18 00:15 IST

சீர்காழி:

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் முகத்துவாரத்தில் உள்ள மணல் திட்டுகளை படகில் சென்று அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்.

படகில் சென்று ஆய்வு

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கடற்கரையில் முகத்துவாரம் மண் திட்டை அகற்றக் கோரி மீனவர்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் படகில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் மீன் இறங்குதளம் மேம்படுத்துவதற்காக நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.18 கோடியில் பணி நடைபெற்று வருகிறது.

கடல் அரிப்பு தடுப்பு சுவர்

இப்பணியில் படகு அணையும் தளம், கடல் அரிப்பு தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இம்மதிப்பீட்டில் கடல் ஆழப்படுத்துதல், தூர்வாரும் பணி 50 ஆயிரம் கன அடி மீட்டர் வரை நடைபெற உள்ளது. தற்போது உப்பனாற்றில் நீர்வரத்து இல்லாத காரணத்தினால் திருமுல்லைவாசல் முகத்துவாரம் கடல் சீற்றத்தால் மணல் அரிப்பு ஏற்பட்டு, மீனவர்கள் படகுகளை நிறுத்த முடியாத நிலையில் உள்ளனர்.

மணல் திட்டை அகற்ற உத்தரவு

மீனவர்களின் குறைகளை கேட்டறிந்து, கள ஆய்வு செய்து, அவர்களின் கோரிக்கையின்படி, முகத்துவாரத்தில் உள்ள மணல் திட்டை அகற்றி சிரமம் இல்லாமல் படகை நிறுத்த, உடனடியாக கள ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்டத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் மகாபாரதி, சீர்காழி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் அர்ச்சனா, கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், திருமுல்லைவாசல் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா தமிழ்ச்செல்வன் மற்றும் பலர் உடன் இருந்தனர

Tags:    

மேலும் செய்திகள்