சாக்கு மூட்டைகளில் மணல் கடத்தல்; 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

சாக்கு மூட்டைகளில் மணல் கடத்திய சம்பவத்தில் 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update:2022-07-13 23:21 IST


திருக்கோவிலூர், 

மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் மணலூர்பேட்டையில் உள்ள தென்பெண்ணை ஆற்றுக்கு செல்லும் சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அந்த வழியாக 4 மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை நிறுத்தினர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிள்களை போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். அருகே சென்று பார்த்த போது சாக்கு மூட்டைகளில் மணல் கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார் ,தப்பி ஓடிய மணலூர்பேட்டை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த அருண் (வயது 22), புருஷோத்தமன்(22), நாட்டார் தெருவை சேர்ந்த அன்பரசு (19), பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த பாலச்சந்தர் (20) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்