தண்டாயுதபாணிக்கு சந்தனக்காப்பு அலங்காரம்
தண்டாயுதபாணிக்கு சந்தனக்காப்பு அலங்காரம்;
திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தண்டாயுதபாணி சாமி கோவிலில் ஆடி கிருத்திகை நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தண்டாயுதபாணிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் கோவில்பத்து வெற்றிவேல் முருகன் கோவிலில் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.