கஞ்சா விற்பனை வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை பேட்டையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், கஞ்சா போதை பொருள் விற்பனை செய்து எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்தார்.;
திருநெல்வேலி, பேட்டை எம்.ஜி.பி. 2வது வடக்குத் தெருவைச் சேர்ந்த முகமது முத்து மைதீன் மகன் இப்ராஹிம் ராசிக் (வயது 22) என்பவர் திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்து எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த "மருந்து சரக்கு குற்றவாளி" ஆவார்.
இதனையடுத்து அந்த வாலிபர் திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) பிரசண்ணகுமார், போலீஸ் உதவி கமிஷனர் (டவுண் சரகம்) அஜுக்குமார், டவுண் சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி ஆகியோரின் பரிந்துரையின்பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.